மருமகள்களும் அவர்களின் உரிமைகளும்!

சமீபத்தில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம், தனது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதற்காக கணவனைத் தண்டிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டது:மருமகளை ஒரு குடும்ப உறுப்பினராக நடத்த வேண்டும், ஒரு வேலைக்காரியாக அல்லமேலும் அவளை "கணவனுடைய வீட்டிலிருந்து எந்த நேரத்திலும் துரத்திவிட முடியாது "

சில நேரங்களில் மணப்பெண், கணவனாலும் அவனது வீட்டினராலும் நடத்தப்படும் முறையானது, சமூகத்தில் ஒரு மரத்துப்போன உணர்வினை உருவாக்குகிறது"

பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள் எந்த உணர்வுப் பாதுகாப்பு இல்லாமலும் எப்போதும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலிலும் இருக்கும் ஒரு நாட்டில் அவள் தன்னுடைய வீடு என்று பெயர் கொண்ட இடத்தை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேற வேண்டியிருக்கலாம்; அங்கு ஆணை விட மனைவி எப்போதும் சிறியவளாக இருக்க வேண்டும் என்ற சின்ன மனநிலையின் காரணமாக ஆணின் சட்டப்பூர்வ திருமண வயது (21) மற்றும் பெண்ணின் சட்டப்பூர்வ திருமண வயது (18) என்பது மீறப்படுகிறது; அங்கே சொத்துக்களுக்கான வாரிசுரிமைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது, அங்கே சாதாரண குடிமக்களை விட அதிக சக்திபடைத்த அதிகாரத்தின் கையில் பாதுகாப்பான கவசம் இருக்க வேண்டும்அப்போது தான் உரிமைகள் பாதுகாக்கப்படும். இதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு தான் நன்றி கூற வேண்டும், அது அதுபோன்ற பல சட்டங்களை அமைத்துள்ளது, அச்சட்டங்கள் மருமகள்களுக்கெதிரான கொடுமைகளைத் தடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் அவற்றில் பலவற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் சமூகத்தின் பல ஆண்டுகளாக உள்ள பெண்களுக்கெதிரான அடக்குமுறையால் தான் அதுபோன்ற வேறுபாடுகள் வரக்கூடும் என்று கருதியிருக்கலாம். இதனால்தான் இந்திய அரசியலமைப்பின்  பரிவு 15(3) மருமகள்கள் சார்பாக நடவடிக்கை எடுக்க அரசிற்கு அதிகாரமளிக்கிறது. உண்மையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாலியல் சமவுரிமை கவனமாகப் பின்பற்றப்பட்டுள்ள மிகச் சில ஆவணங்களுள் ஒன்றாகும்.

ஒவ்வொரு திருமணமான பெண்ணும் அறிய வேண்டிய மருமகள்களுக்கான சில முக்கிய உரிமைகள் இதோ:

இந்துச் சட்டத்தின் படி, ஸ்தீரிதானம் என்பது பெண் திருமணத்திற்கு முன் / திருமணச் சடங்குகளின் போது பெறுகின்ற பொருட்கள் (எ.கா. கடவுள் பாரி, பாரத், மூ திக்காய்) மற்றும் குழந்தை பிறப்பின் போது பெறுகின்ற எல்லாவற்றையும் (அசையும் அசையா சொத்துகள், பரிசுகள் போன்றவை) குறிக்கும். உச்ச நீதிமன்றம் பெண் ஸ்திரீதானத்தில் பெறுகின்றவை மீது தவிர்க்க முடியாத உரிமைகள் பெற்றுள்ளாள் மேலும் அவள் கணவனிடமிருந்து பிரிந்த பிறகும் அவற்றிற்கு உரிமை கோர முடியும் என்று குறிப்பிடுகிறது. அதனை மறுப்பது குடும்ப வன்முறைக்கு ஈடானதாகும் அது கணவன் மற்றும் அவனுடைய குடும்பத்தினரை குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ளச் செய்கிறது. மாமியார் அவளுடைய மருமகளின் ஸ்திரீதானத்தை வைத்திருக்கும் நிலையில் இறந்தால், மேலும் அவள் எந்த உயிலையும் விட்டுச் செல்லவில்லையெனில், மருமகள் அதன்மீது சட்டப்பூர்வ உரிமை பெற்றுள்ளாள், மகனுக்கோ பிற குடும்ப உறுப்பினர்களுக்கோ உரிமையில்லை. வாழ்வினை எளிமையாக்க, பெண்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

 

கணவன் அல்லது அவரது எந்த குடும்ப உறுப்பினரால் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறை அடிப்படையில் விவாகரத்து பெறுவது தவிர்த்து, கணவனை "அமைதியாக வைக்கும் ஒப்பந்தம்", அல்லது "நன்னடத்தைக் கட்டுப்பாட்டை" சிறப்பு நீதித்துறை நடுவர் மூலம் செயற்படுத்த வைக்கலாம் என்றும் சில பெண்கள் அறிந்திருக்கிறார்கள். கணவனை வைப்புத் தொகை கட்டும்படி (பணம் அல்லது சொத்து) கூறலாம், அவன் தொடர்ந்து வன்முறையாக நடந்தால் அது பறிமுதல் செய்யப்படும். பின்வரும் உடலியல், பாலியல், மன, வார்த்தை மற்றும் உணர்வு வன்முறைகள் குடும்ப வன்முறையின் கீழ் வருகின்றன:

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956படி, ஒரு இந்து மனைவி தனக்குச் சொந்தமானதாக இல்லாவிட்டால் கூட அவளது புகுந்த வீட்டில் வசிக்கும் உரிமை பெற்றிருக்கிறாள். புகுந்த வீடு என்பது கணவனுக்குச் சொந்தமான அல்லது குறைந்தபட்சம் கணவன் வசிக்கும் இடத்தைக் குறிக்கும். கணவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தங்குமிடம் அளிக்கும் கடமை கொண்டுள்ளான், அது வாடகை இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருந்தாலும், அவன் அந்த இடத்தில் உடன் தங்கியிருக்க வேண்டும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவு சேதமடைந்து கணவன் வாடகை வீடு அல்லது அவனது நிறுவனம் வழங்கிய தங்குமிடத்தை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் உள்ளன. ஆனால் இது அவனுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அடிப்படை பராமரிப்பு வழங்குவதிலிருந்து அவனுக்கு விடுதலையளிக்காது, அடிப்படை பராமரிப்பில் உணவு, உடை, தங்குமிடம், கல்வி மற்றும் மருத்துவ கவனிப்பு/சிகிச்சை மற்றும் திருமணமாகாத மகள் எனில் அவளுக்கான திருமணத்திற்கு போதிய செலவுகள் செய்வது போன்றவை அடங்கும்.

உச்சநீதிமன்றம், தந்தை தனது இறப்பிற்கு பிறகு, தனக்குச் சொந்தமான கூட்டுறவு சமூக தங்குமிடத்தை பிற குடும்ப உறுப்பினர்களுக்கு வாரிசாக விட்டுச் செல்லும் செயல்முறையில் தனது திருமணமான மகளையும் சேர்த்துக் கொள்ள சட்டப்பூர்வ கடமைகொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு கூட்டுறவு சமூகத்தின் உறுப்பினர், விதிமுறைகளின் படி ஒரு நபரை தனது சுய சிந்தனையின் கீழ் வாரிசாக நியமிக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அவரின் இறப்பிற்கு பின் அது போன்ற நியமிக்கப்பட்ட நபரின் பெயருக்கு, கூட்டுறவு சமூகம் அவரின் எல்லா பங்குகள் மற்றும் வட்டித் தொகையினை மாற்றும் கடமை கொண்டுள்ளது. மற்றவர்களின் சொத்து அல்லது வாரிசுரிமையானது அதற்கு கீழுள்ள உரிமை ஆகும்என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

கூடுதலாக, தந்தை எந்த உயிலையும் விட்டுச் செல்லவில்லையெனில், தந்தையின் சொத்தில் மகன்களைப் போல் மகள்களும் சம உரிமை கொண்டுள்ளனர். மகள்கள் தாயின் சொத்திலும் பங்கு கொண்டுள்ளனர்.

எனனுடைய எந்த சக பெண்களும் அது போன்ற இக்கட்டான நிலைக்குச் சென்று இது போன்ற வசதிகளை கட்டாயப்படுத்தி பெறுகின்ற நிலைக்குச் செல்லக்கூடாது என்று நான் உண்மையாக நம்புவதுடன் இறைவனையும் வேண்டுகிறேன், ஆனால் உங்கள் அறிவு ஒருநாள் இதுபோன்ற சாதகமற்ற நிலையைத் தடுப்பதற்கு எவருக்கேனும் உதவலாம்

 

SHEROES
SHEROES - lives and stories of women we are and we want to be. Connecting the dots. Moving the needle. Also world's largest community of women, based out of India. Meet us at www.sheroes.in @SHEROESIndia facebook.com/SHEROESIndia

Share the Article :