பெண்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்? – இதோ 30 சிறந்த காரணங்கள்

நீங்கள் வாழ்க்கையில் பதிலளிப்பதற்கு மிகவும் கடினமான கேள்வி “அவன்/அவள் என்னை விரும்புகிறாரா/இல்லையா" என்பது தான் என்று நினைத்தால், ஒருவேளை அதனை நீங்கள் பாதி சரியாகவும் பாதி தவறாகவும் புரிந்துகொண்டீர்கள்.

ஏன்? ஏனெனில் பதிலளிப்பதற்கு சமஅளவில் (இன்னும் கடினமான) மற்றொரு கேள்வியும் உள்ளது, அதாவதுஅவள் வேலை செய்ய வேண்டுமா? – குறிப்பாக திருமணமான/தாய்மையடைந்த பெண் எனில்”.இந்த தலைப்பு எனக்குத் தெரிந்த எல்லா வட்டங்களிலும் அதிகம் கலந்துரையாடவும் விவாதிக்கவும் பட்டுள்ளது. அவன்/அவள் வயது எதுவாக இருந்தாலும், எனது பக்கத்துவீட்டு தாத்தாவிலிருந்து எனது அம்மா எனது மாமியார் எனது நண்பர்கள் எனது சக பணியாளர்கள் எனது மகள் எனது குடும்ப நண்பரின் நாய் என்னைக் குழந்தையாக இருக்கும்போது பார்த்த தூரத்து மாமா /அத்தை வரையில்… கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த அனைவரும் இன்னும்  பலரும் - இந்த பிரச்சினையில் உறுதியான பார்வையையும், கருத்தையும் எண்ணவோட்டத்தையும் கொண்டுள்ளனர். நிச்சயமாக! நாம் அனைவரும் சிந்தனை மற்றும் கருத்துச் சுதந்திரம் கொண்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எனவே தான் அது பற்றிய கருத்துகளும் நூல்களும் கதைகளும் ஏராளமாக உள்ளன!  

அந்தக் கருத்துகள் இதோ

அந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும் மேலும் அவளுடைய பதிலால் திருப்தியடையவும் பல பெண்கள்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும்.

பெண்கள் தன்னுடைய பதிலை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு, மற்றும் அது கொண்டிருக்கும் பதில்களை எதிர்கொள்வதற்கும் பல பெண்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும்

பெண்கள் தங்களின் பதிலை தினசரி செயல்படுத்த, மேலும் அவளது வழியில் வருபவற்றை எதிர்கொள்ள பல பெண்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும்  

ஏன்?
ஏனெனில் நானும் அதுபோன்ற நிலையில் இருந்துள்ளேன், அதனைச் செய்தும் உள்ளேன்! வாழ்வின் மற்ற அனைத்தையும் போல் – அதுவும் நன்மை, தீமை மற்றும் மோசமானவற்றைக் கொண்டுள்ளது.

இருப்பினும், எனது குரலைக் கேட்கும் எவரும் நான் #WomenAtWork ன் தீவிரமான பரப்புரையாளர் என்பதை அறிந்துகொள்வார்.

பல நேரங்களில் நான் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் பெண்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?அதற்கான எனது பதில் இதோ

1) நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். பொருளாதாரச் சார்பின்மை மற்றும் சுதந்திரம் ஆகியவை பெண்களின் வாழ்க்கையின் தரத்திலும் அளவிலும் தாக்கம் செலுத்தும் மிகவும் முக்கியமான மாறிகளாக இருக்க முடியும். அவை கண்ணியமான தரமான வாழ்க்கை மற்றும் மரியாதைக்கான விடுதலை அளிக்கும் அம்சங்களில் ஒன்றாகும்.

2) நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். கற்றல் என்பது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை வளர்ச்சியின் அடிக்கற்களுள் ஒன்றாகும் மேலும் நீங்கள் வேலை செய்யும் போது எவற்றைக் கற்கலாம் என்பதற்கு வானமே எல்லை (அல்லது வானம் பற்றிய உங்கள் பார்வை) ஆகும்.

3) நீங்கள் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் தனிப்பட்ட உறவுகள் மற்றும் தொடர்புகளைச் சார்ந்திராமல் இருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பில் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை

4) பெரும்பாலான பணியாற்றும் பெண்கள் வீட்டில் உதவிக்கு பெண்களை அமர்த்துவதால் சிறந்த பணி வழங்குநர்களாக இருக்கிறார்கள் – வீட்டு பராமரிப்பு சேவைப் பணிகளான வண்டி ஓட்டுதல்/சமையல்/துணி இஸ்திரிபோடுதல் போன்றவற்றிற்காக மற்றவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். நீங்கள் ஒரு வேலை செய்யும் பெண்ணாக இருப்பதின் மூலம் உங்களைப் போன்ற பெண்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பினை அளிக்கிறீர்கள் அதன் மூலம் உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முக்கியமான பங்களிப்பை அளிக்கிறீர்கள்  

5) நீங்கள் பன்முக வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளீர்கள். அது உங்களைப் பற்றிய, மக்களைப் பற்றிய, உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உங்களின் புரிதல்களை அதிகப்படுத்துகிறது

6) நீங்கள் வாழ்வின் எல்லா பகுதியைச் சேர்ந்த / பலதரப்பட்ட பின்னணிகள் கொண்ட மக்களுடன் இணைகிறீர்கள் மற்றும் உரையாடுகிறீர்கள் அது உங்கள் சிந்தனை, பார்வைகள், கருத்துகள், கருத்தோட்டங்களைத் திறக்கிறது

7) உங்கள் பொது அறிவு மேம்படுகிறது 4 சுவற்றைத் தாண்டியுள்ள உலகின் பகுதியில் இருப்பதின் மூலம் நீங்கள் நிறையக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்

8) நீங்கள் 4 சுவற்றிற்குள் உள்ள உலகிற்கும், 4 சுவற்றிற்கு வெளியே உள்ள உலகிற்கும் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்துகொள்கிறீர்கள். நான் சொல்வதை நம்புங்கள், வேலை செய்யும் பெண் என்ற அடிப்படையில் இது உங்கள் கூச்சத்தை உடைக்கும்!

9) நீங்கள் மனிதர்களின் நடத்தை மற்றும் உண்மையான உலகம் எப்படி இயங்குகிறது என்று புரிந்துகொள்கிறீர்கள்

10) நீங்கள் 4 சுவற்றைத் தாண்டியுள்ள உலகம் எப்படி நேர்மையாகவும் / நேர்மையில்லாமலும் இருக்கிறது என்பதைப் பார்க்கிறீர்கள்அதனால் தான் அது கலியுகமாக உள்ளது. அது நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பார்க்கும் முறையையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழும் முறையையும் மாற்றுகிறது

11) உங்கள் சுய மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறதுநீங்கள் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறீர்கள்

12) உங்கள் குடும்பம் உங்களைப் பலமுறை புதிய ஒளியில் பார்க்கிறது. இது அதிக மரியாதையாகவும் அவர்கள் உங்களை மதிப்பதாகவும் மாறுகிறது

13) நீங்கள் சிறந்த முடிவுகளை எடுக்க செயல்திறன் பெற்றவராகவும், திறன் கொண்டவராகவும், அதிகாரமுடையவராகவும் மாறுகிறீர்கள் – ஏனெனில் நீங்கள் உங்களுக்கு தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளது என்று புரிந்து கொள்கிறீர்கள்

14) நீங்கள் உங்களுக்காக பொருட்களை வாங்கலாம்”– ஆம்! நீங்கள் (பல) எந்த வியாபரத்திற்கும் சிறந்த வாடிக்கையாளராக உள்ளீர்கள். நீங்கள் பொருளாதாரத்திற்கு பண ஊட்டம் அளிக்கிறீர்கள் மற்றும் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கிறீர்கள்

15) நீங்கள் ஒருவருக்கு முன்மாதிரியாகவும் இருக்கலாம் எனது பல முன்மாதிரிகள் வேலை செய்யும் அனைத்தையும் ஒரே நாளில் சமாளிக்கும் பெண்கள் ஆவர்

16) நீங்கள்பல முதன்மைவாழ்க்கை திறன்களைக்கற்றுக் கொள்கிறீர்கள். அவற்றில் முக்கியமானவை நேர மேலாண்மை, தொடர்பாடல், பேச்சுவார்த்தை, மறுக்கும் திறன் ஆகியவை

17) நீங்கள் பல கூடுதல் சுமைகளை விடுகிறீர்கள்ஏனெனில் நீங்கள் கடந்த காலத்தில் மூழ்க அல்லது எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க நேரம் கொண்டிருக்கவில்லை

18) நீங்கள் எங்கும் எவரையும் ஊக்குவிக்கலாம்ஏனெனில் அது சாத்தியமானதே, உன்னால் முடியும்என்பதின் நேரடி எடுத்துக்காட்டாக வாழ்கிறீர்கள்

19) நீங்கள் மற்றவர்களுக்காக பொருட்களை வாங்கலாம்”– அதுவும் எந்தக் கேள்வியும் இல்லாமல்

20) நீங்கள் வாழ்க்கையைப் புதிய கண்ணாடி கொண்டு பார்க்கிறீர்கள்

21) நீங்கள் உங்கள் தாய், தந்தை, ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் மதிப்பை உணர்ந்து கொள்கிறீர்கள்

22) நீங்கள் நேரத்தை மதிக்கிறீர்கள். நீங்கள் அது எவ்வளவு முக்கியமானது / முக்கியமற்றது என்பதைக் கவனிக்கிறீர்கள்

23) நீங்கள் கூடுதல் சுதந்திரமாக உணர்கிறீர்கள்

24) நீங்கள் உங்கள் வாழ்வின் மீது கட்டுப்பாட்டில் உள்ளீர்கள்

25) நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு சுதந்திரத்தையும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதையும் கற்பிக்கிறீர்கள்

26) நீங்கள் (பொருளாதார உலகில்)ஒரு சிறந்த உற்பத்தித் திறன் கொண்ட பங்களிப்பாளராக இருப்பதின் மூலம் உலகப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறீர்கள்  

27) நீங்கள் பணத்தின் மதிப்பை நன்கு புரிந்து கொள்கிறீர்கள் உணர்ந்துகொள்கிறீர்கள்

28) நீங்கள் உங்கள்கணவரின்வாழ்க்கை எப்படி உள்ளது என்று “உண்மையில்” புரிந்துகொள்கிறீர்கள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வேலை செய்யும் கணவரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறீர்கள்

29) உங்கள் வேலை நேரடியாகவோ / மறைமுகமாகவோ உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது

30) நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளுக்கு  செழிப்பான பின் வாழ்க்கையை (பொருளாதாரரீதியிலும் பிற வழிகளிலும்) விட்டுச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன

அவள் என்ன வேலை செய்கிறாள் என்பது முக்கியமில்லை

அவள் எங்கு வேலை செய்கிறாள் என்பது முக்கியமில்லை

அவள் எப்படி வேலை செய்கிறாள் என்பது முக்கியமில்லை

அவள் எவ்வளவு காலம் வேலை செய்கிறாள் என்பது முக்கியமில்லை

முக்கியமானது என்னவெனில் அவள் வேலை செய்கிறாள்

இன்றும், நாளையும், நாளை மறுநாளும்

முக்கியமானது என்னவெனில் அவளது வேலை அவளது வாழ்க்கையிலும் அவளைச் சார்ந்தவர் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுத்துவது தான்

இந்தப் பதிவு தங்களின் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில் “வேலை” செய்த பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த வேலை செய்யும் குழு விரிவடைந்து, செழிப்படைந்து, தளைத்தோங்கட்டும்


SHEROES
SHEROES - lives and stories of women we are and we want to be. Connecting the dots. Moving the needle. Also world's largest community of women, based out of India. Meet us at www.sheroes.in @SHEROESIndia facebook.com/SHEROESIndia

Share the Article :